Monday, January 26

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பரங்கிகமம் பகுதியில், விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் உணவுப் பண்பாட்டியல் தொடக்க விழா, 9ஆம் தேதி (வியாழன்) காலை 11:30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் தலைவராக இலுப்பைக் கடவை கமக்கார அமைப்பின் தலைவர் வி. எஸ். சிவகரன் செயல்பட்டார்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து, தமிழர் பாரம்பரிய அறுவடை முறையை அறிமுகப்படுத்தி, முதல் அறுவடையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர் அன்ரனி மரின் குமாரை, மாவட்ட விவசாய பணிப்பாளர் அ. சகிலா பானு, மற்றும் பல திணைக்களத் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Share.

     © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

    Exit mobile version