உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடையில் 30/12/2024 கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணவுகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல்.
மேலும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு, கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.
அதற்கான நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்.
Trending
- கறுப்பு ஜூலை நினைவு! செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நீதியை வலியுறுத்தி 10 Downing Street முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
- கரவெட்டியில் சிறப்பாக நடைபெற்ற தொற்றாத நோய்களுக்கான மருத்துவ முகாம்
- மாகாண மட்ட மென்பந்து துடுப்பாட்டம்! நடேஸ்வரா கல்லூரி பெண்கள் அணி சாம்பியனாகி வரலாற்று சாதனை!
- தலைவர் கிண்ண உதைபந்தாட்ட போட்டி – 2026:ஐக்கிய விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கு முன்னேறியது!
- தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவல்: இங்கிலாந்து APPG வாழ்த்து
- கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் வடக்கு மாகாணத்திற்குஇருநாள் விஜயம்
- வெண்கரம் அறக்கட்டளையின் 16வது ஆண்டு நிறைவு: கொடையாளர்களுக்கு நன்றியும் புதிய கல்வி முயற்சிகளும்
- லண்டன் தமிழ் மார்க்கெட் 2026 – Hayes நகரில் நடைபெறுகிறது
