உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடையில் 30/12/2024 கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணவுகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல்.
மேலும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு, கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.
அதற்கான நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்.
Trending
- பிரித்தானிய தமிழர் பேரவை: மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடுகள் தடைகளை விதிப்பதை ஊக்குவிக்கின்றன
- பிரிட்டன் புதிய தடைகளை அறிவித்துள்ளது
- உரிமை போராட்டத்தை இனவாதமாக அர்த்தப்படுத்த வேண்டாம் என தென்னிலங்கை மக்களிடம் கோரிக்கை
- கையகப்படுத்தலின் கீழ் உள்ள மாவீரர்துயிலுமில்லங்களை விடுவிக்க வேண்டும்.
- காணாமல் போன புதல்வனைத் தேடி எட்டு வருடங்கள் போராடிய தமிழ்த் தாய் உயிரிழப்பு
- பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பை நிராகரித்து விடுத்த தமிழரசுக்கட்சி
- “நீதிக்காக இன்னும் எவ்வளவு நாட்கள்?” 2922 நாட்கள் கண்ணீரில் – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்