Friday, July 18

தமிழ் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளில் முல்லைத்தீவில் (Mullaitivu) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முள்ளியவளை – சந்தியம்மன் ஆலயம் முன்பாக இன்று ( 13.05.2025) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களான ஞா.யூட்பிரசாத் மற்றும் த.அமலன் சமூக செயற்ப்பாட்டாளர்கள், மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

இதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நேற்று (12) முதல் எதிர்வரும் மே18ம் திகதிவரை வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெறுவது வழமை.   அந்த வகையில் வடக்கு, கிழக்கு முழுவதும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version