Monday, January 26

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 10.12.2024 காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது, சிவில் உடை தரித்த புலனாய்வாளர் போராட்டகாரர்களினை அருகே சென்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்த போது, இவ்விடத்தில் ஒவ்வொரு உறவுகளையும் புகைப்படம் எடுக்க வேண்டிய தேவை என்ன என கூறி துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை இராணுவத்தினர், பொலிஸார் , சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் போன்றோர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version