சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு இன்று 10. 12. 2024 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினால் “நாங்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்து போராடுகின்றோம்” எனும் தொனிப்பொருளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது யாழ்ப்பாண பொதுசன நூலக நுழைவாயிலில் காலை 10:30 மணி அளவில் இடம்பெற்றது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினர்கள் சில பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்பார்ப்பு, மனக்குறைகளை காட்சிப்படுத்தினர். அவை நீதி?, பொறுப்புக்கூறல்?, உண்மை? போன்ற பதாதைகளை உள்ளடக்கியதாக இருந்தன.
இவர்களின் இன்றைய போராட்டமானது கடந்த 30 வருட யுத்த போராட்டமாகவே இருந்தது. இந்த மனித உரிமை தினத்திலாவது தமக்கான உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
இனி வரும் காலங்களில் இப்போராட்டமானது தொடருமா? அல்லது முற்றுப்பெறுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.