Monday, January 26

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க நிவாரணப் பொதிகளுடன் கூடிய அமெரிக்க விமானப்படையின் US Air Force C-130J சரக்கு விமானம் இன்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இது யாழ்ப்பாண விமான நிலையத்தில் அமெரிக்க இராணுவ சரக்கு விமானம் தரையிறங்கும் அரிதான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த C-130J விமானம், வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதிகளை ஏற்றி கொண்டு இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு வந்தது.

நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்குக்கான நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்கப்படும் எனவும், இந்த நடவடிக்கை இருநாடுகளுக்கிடையேயான மனிதநேய ஒத்துழைப்பின் முக்கிய கட்டமாகும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version