Wednesday, July 16

ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 55,000 மெட்ரிக் தொன் எம்.ஓ.பி உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பூநகரி, கிளிநொச்சி மற்றும் கண்டாவளை கமநல சேவை நிலையங்களில் இந்த உரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன், இந்த உரங்கள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உரம் கிடைப்பதால் கிளிநொச்சி விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version