நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பொலிஸார் விசேட போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பயன்படுத்தி ஓட்டுதல், பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாக ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தொலைதூர பேருந்து சாரதிகளின் கவனக்குறைவான ஓட்டத்தை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிவில் உடையிலான பொலிஸ் அதிகாரிகள் பயணிகள் பேருந்துகளில் கணிசமான தூரம் பயணித்து, விதிமீறல்களை கண்காணித்து வருகின்றனர். பின்னர் சீருடையிலான பொலிஸ் அதிகாரிகள் பேருந்துகளை நிறுத்தி, சாரதிகளுக்கு அறிவுரை கூறி, சட்ட நடவடிக்கை எடுக்கின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.