Friday, April 18

தமிழ் மக்களின் பாரம்பரிய நிகழ்வான மரபு திங்கள் நிகழ்வு புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களால் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. குறிப்பாக கனடா அவுஸ்ரேலியா பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த மரபு திங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன

அந்த வகையில் லண்டனில் வோல்தம்போரஸ்ட் தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து வோல்தம்போரஸ்ட் கவுன்சில் ஆதரவுடன் ஒரு தமிழ் மரபுத்திங்கள் கடந்த சனிக்கிழமை 25/01/2025 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முற்றத்து பொங்கல், தமிழ் மக்களின் தொன்மையும் அதனுடைய முதிர்ச்சியும் தொடர்பான சிறப்பு கண்காட்சியும், அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அந்த ஊர் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் மக்கள் எல்லோரும் இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

கலை நிகழ்வுகளில் சிறப்பான தமிழ் மக்களின் பாரம்பரிய சிறப்புக்கள் பிரதிபலிக்கும் வகையில் இடம்பெற்றன.பறை இசை, கும்மியாட்டம் நாட்டிய நடனம் மற்றும் பாடல்கள் போன்றன இந்நிகழ்வை சிறப்பித்து.

இந்நிகழ்வில் கடந்த காலங்களில் சிறப்பாக சேவை புரிந்த மூவருக்கு புலரொளி மதிப்பளிப்பும் இடம்பெற்றது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version