Friday, July 18

யாழ். பருத்தித்துறை மற்றும் பொன்னாலை வீதியின் புனரமைப்பை கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் 30 ஆண்டுகளுக்கு மேலாக, வல்வெட்டித்துறையிலிருந்து தொண்டைமானாறு வரை நீளமான 12.8 கி.மீ. வீதியின் புனரமைப்பை கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தங்களின் கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.

போராட்டத்தில், “எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தருமா?”, “ஓட்டுக்காக வீடு வந்தவரே, வந்த வீதியை மறந்தது ஏன்?” போன்ற பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகள் ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதனுடன், மக்கள் இந்த வீதியின் புனரமைப்பை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version