Friday, April 18

இலங்கையை சுத்தமாகவும் அழகாகவும் மாற்றும் நோக்கில், ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. ‘Clean Sri Lanka’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த திட்டம், நாட்டின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படும்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரசாமி கையொப்பமிட்டு இந்த செயலணி குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட 18 பேர் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளனர்.

சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.

சுற்றுச்சூழலை பாதுகாத்து, நிலைத்தன்மையை உறுதி செய்தல்.

பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டின் வருவாயை அதிகரித்தல்.

ரசின் செயல்திறனை மேம்படுத்தி, ஊழலை ஒழித்தல்.

ஜனாதிபதியின் ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற கொள்கை பிரகடனத்தின் ஒரு பகுதியாகும். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதியின் ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்ற கொள்கை பிரகடனத்தின் ஒரு பகுதியாகும். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Clean Sri Lanka திட்டம், இலங்கையை ஒரு சுத்தமான, அழகான மற்றும் நிலையான நாடு ஆக்குவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும். இந்த திட்டத்தின் வெற்றி, நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெருமளவு சார்ந்துள்ளது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version