நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
சங்கம் மேலும், உள்ளூர் சந்தையில் கொள்வனவு செய்யும் அளவுக்கு உப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் ஏற்படக்கூடிய உப்புத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இந்த இறக்குமதி நடவடிக்கை, சுமார் 15 வருடங்களின் பின்னர் பொது பாவனைக்காக உப்பு இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.