Friday, July 18

முல்லைத்தீவு (Mullaitivu) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரைஒதுங்கியுள்ளது.

 முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் (Myanmar) இருந்து சுமார் 100 ற்கு மேற்பட்டவர்களுடன் நாட்டு படகு ஒன்று திசைமாறி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த படகில் சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளனர். குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள்.

அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களை திருகோணமலையில்(Trncomale) இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர் ஆகியோரும் கரையொதுங்கிய அகதிகளின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டனர்.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version