Monday, March 2

யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவரும் சிறந்த கல்வியாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்கள், மக்களுக்கு ஆற்றி வரும் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டி ‘எம் மண்ணின் வானிலை வல்லோன்’ சிறப்பு விருதினால் கௌரவிக்கப்பட்டார்.

வானிலை மற்றும் சூழலியல் துறைகளில் அவர் வழங்கி வரும் ஆய்வுகள், வழிகாட்டல்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு பணிகள் குறிப்பிடத்தக்கவை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version