அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்படாததைக் கண்டித்து, கிழக்கு மாகாணத்தின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று (19) முதல் வைத்தியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தவும், அவரை தற்காலிகமாக இடைநிறுத்தவும் கோரியிருந்த நிலையில், சுகாதார அமைச்சு சாதகமான பதில் வழங்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
