தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ (TELO) கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக, மன்னார் நகர சபைத் தவிசாளர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இத் தெரிவு இன்று (18) காலை, கட்சித் தலைவர் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உப மாவட்ட செயலாளராக அருள்ராஜ் ஜஸ்ரின் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதுடன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
