Monday, January 26

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல், சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில் 20.01.2026 யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளீர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 100 பேர் இதில் பங்கேற்றனர்.

தொடக்க உரையாற்றிய சட்டத்தரணி கலாநிதி க.குருபரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக என்.பி.பி. அரசாங்கம் அளித்த உறுதி முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டார். தமிழர் தரப்பின் நிலைப்பாடு, பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்; அதற்கு பதிலாக புதிய சட்டம் தேவையில்லை என்பதாகும் என அவர் வலியுறுத்தினார்.

முன்மொழியப்பட்ட சட்ட வரைபு, அரசியல் போராட்டங்களை குறிப்பாக தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும், அதனை மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவையினர் கருத்துத் தெரிவித்தனர்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version