கொஸ்கொடை, பெலகஸ்பலாத்த பிரதேசத்தில் உள்ள ஒரு வயலில் மின்சார வேலியில் சிக்கி 28 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இன்று, வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன், வன விலங்குகள் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க அருகிலுள்ள வயலுக்குச் சட்டவிரோதமாக மின்சார வேலிகளை பொருத்தியிருந்தார். இன்று அந்த வயலுக்குச் சென்ற இந்த இளைஞன், அதே மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.