Monday, March 2

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், எமது சங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தையல் இயந்திரங்களை கொண்டு, இளவாலை கிராமத்தில் ஆடை உற்பத்தி மற்றும் புத்தகப்பை உற்பத்தி செயற்திட்டம் கடந்த 01-02-2026 தைபூச தினத்தன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, குறித்த உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றவுள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சுயதொழில் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

மேலும், இச் செயற்திட்டத்தின் உத்தியோகபூர்வ திறப்புவிழா வெகுவிரைவில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களதும், தெல்லிப்பழை பிரதேச செயலக அதிகாரிகளினதும் பங்கேற்புடன் சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version