Monday, January 26

அவசரகால அனர்த்த நிலைமையால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாலர் பாடசாலைகள் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள், பாதுகாப்பு நிலைமை சீராகியுள்ள பகுதிகளில் 2025 டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும் என முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது.

செயலகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,
மழை, காற்றழுத்தம் மற்றும் சூழலியல் அபாயங்கள் குறைந்து, குழந்தைகள் பாதுகாப்பாக வருகை தரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்ட நிலையங்களில் மட்டுமே மீளத் திறப்பு நடைமுறைக்கு வரும்.

குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து ஒவ்வொரு நிலையமும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள பகுதிகளில் அனர்த்த நிலைமை முழுமையாக சீர்ப்படுத்தப்பட்ட பிறகே திறப்பு பற்றிய புதிய அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version