அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கம் இன்று மிகப்பெரிய நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. வீடுகள், விவசாயம், கால்நடை, மீன்பிடி, கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு தேவையான பல்வேறு பிரிவுகளில் இந்த நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
வீட்டு சேதங்களுக்கு நிவாரணம் வீடு முழுமையாக அழிந்தால்: ரூ. 50 லட்சம்
பகுதியளவு சேதமடைந்தால்: ரூ. 10 லட்சம் முதல் 25 லட்சம் வரை
அத்தியாவசியப் பொருட்கள்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை ரூ. 50,000 (உரிமை இருந்தாலோ இல்லையோ அனைவருக்கும்)
குடிவாழ்வு முகாம்களில் இருந்தவர்களுக்கு வீடு திரும்பி குடியேறும் குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் ரூ. 25,000
வாடகை வீடு எடுக்கும் குடும்பங்களுக்கு சிறப்பு வாடகைச் சலுகை
கால்நடை & மீன்பிடி துறைக்கு நிவாரணம் அழிந்த பதிவு செய்யப்பட்ட கால்நடைப் பண்ணைகளுக்கு: ரூ. 2 லட்சம்
சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு: ஒவ்வொரு படகுக்கும் ரூ. 4 லட்சம்
விவசாயிகளுக்கு நிவாரணம் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களுக்கு — ஒவ்வொரு ஹெக்டருக்கும் ரூ. 1.50 லட்சம்
காய்கறி விவசாய சேதங்களுக்கு — ஒவ்வொரு ஹெக்டருக்கும் ரூ. 2 லட்சம்
அழிவடைந்த காய்கறிகளை மீண்டும் பயிரிடும் விவசாயிகளுக்கு — சிறப்பு நிதியுதவி
வணிக கட்டடங்களுக்கு உதவி சேதமடைந்த வணிக கட்டடங்களை மீண்டும் திறக்க — ஒவ்வொன்றுக்கும் ரூ. 50 லட்சம்
மாணவர்களுக்கு கல்வி உதவி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு — Treasury இலிருந்து ரூ. 15,000 — ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 10,000 மொத்தம்: ரூ. 25,000
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும், கல்வியையும் மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிவாரணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
