Monday, January 26

எதிர்பாரா அனர்த்தத்தால் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து, தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள அப்பாவி சிறார்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் யுனிசெப் முன்முயற்சி எடுத்துள்ளது.

மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அனர்த்த நிலையங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், கல்விப் பொருட்கள் மற்றும் தேவையான பயிற்சி வளங்கள் யுனிசெப் அமைப்பினால் விரைவாக பொதியிடப்பட்டு வருகின்றன.

கல்வியில் இடைவெளி ஏற்படாமல் தடுக்கவும், அச்சத்திலும் குழப்பத்திலும் இருக்கும் குழந்தைகளுக்கு கற்றல் ஒரு நிலைத் தூணாக அமைய செய்வதே இந்த முயற்சியின் நோக்கம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் யுனிசெப் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களால் பாராட்டப்படுகின்றன.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version