எதிர்வரும் 15/02/2026 அன்று தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை – பிரித்தானிய கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரிசளிப்பு நிகழ்வு, Hayes Crystal Hall மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கல்வி வளர்ச்சியை பிரதான நோக்கமாகக் கொண்டு நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இப்பேரவை, எமது அடுத்த தலைமுறைக்கு தாய்மொழிக் கல்வியை உறுதியாக வழங்கி வருகிறது. மாணவர்களின் கல்விச்சாதனைகளை கௌரவித்து ஊக்குவிக்கும் இந்நிகழ்வு, தமிழ் சமூகத்தின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் பண்பாட்டு பற்றுறுதியை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க தருணமாக அமையும்.
தமிழ் கல்விப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாத்து வளர்த்துவரும் இப்பேரவையின் சேவையை மனமார்ந்த வாழ்த்துக்களுடன், ஒவ்வொரு மாணவரின் முயற்சியும் எமது சமூகத்தின் எதிர்கால ஒளியாகும். இந்நிகழ்வு அவர்களின் திறமைகளுக்கு ஒரு பாராட்டாகவும், மேலும் உயரங்களை அடைய ஊக்கமாகவும் அமையட்டும்
