Saturday, July 19

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு சோலை வெட்டுவான், முதலான பகுதிகளில் செய்கைக்கு உட்பட்ட நெற்பயிர்கள்  மழை வெள்ளத்தினால் சேதமடைந்து
முற்றாக அழிந்துவிட்டது

இப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன

ஆனால் அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தற்போது இங்கு பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தால் அள்ளுண்டுஅழிந்து விட்டது இதனால் புல் அதிகமாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் விவசாயத்தை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு இன்னல்களையும் சந்திக்கின்றனர்.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version