யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11-இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்பவர் கடந்த மாதம் 5ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெறும் போதே அவர் சில நாட்களில் மயக்க நிலையை அடைந்தார். தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அவர், நேற்று (08) காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூறு பரிசோதனையின் மூலம், கிருமித் தொற்று காரணமாகவே மரணம் ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
