வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து நிலவும் இராணுவப் பிரசன்னத்தையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் எதிர்த்து வரும் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பூரண கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இப்போராட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) அழைப்பு விடுத்துள்ளது. கட்சி வெளியிட்ட அறிவிப்பில், வடக்கு-கிழக்கில் நிலவும் இராணுவத்தின் அநாவசிய பிரசன்னம் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் எதிர்காலத்துக்கும் பெரும் தடையாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “எமது மக்களின் உரிமைகளுக்காகவும் எதிர்காலத்திற்காகவும், அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குங்கள்” என கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
