மட்டக்களப்பு – கொக்குவில், சவுக்கடி கடற்கரைப் பகுதியில் இன்று (11) காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த, தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸார் தெரிவித்ததாவது, அவர் ஏறாவூரில் உள்ள உறவினரின் தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்துக்கு முந்தைய நாள் மாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர், இரவு வரை வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சவுக்கடி கடற்கரைப் பகுதியில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திலிருந்து அவர் செலுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
