ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதால், ஆண்டு இறுதி விடுமுறை காலத்தில் பல விமானங்கள் தாமதமாகி உள்ளன.
இந்த சைபர் தாக்குதலால் நிறுவனத்தின் கணினி அமைப்புகள் பாதிக்கப்பட்டு, விமான டிக்கெட் விற்பனை உள்ளிட்ட பல சேவைகள் தடைபட்டுள்ளன. இதனால், பல பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிட முடியாமல் தவித்து வருகின்றனர்.