Monday, January 26

பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் கீழ், நாடளாவிய ரீதியில் கடந்த 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 2,561 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது, 64,258 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 167 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 462 கிலோ கிராம் கஞ்சா, 15 கிலோ கிராம் ஹஸிஸ் போதைப்பொருள், 8 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version