Friday, July 18

இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வு 2025ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகரம், பாராளுமன்ற தமிழ் இந்து அலுவலர்கள் சார்பில் திரு விஸ்வலிங்கம் முரளிதாஸ், புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு / இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் அனுசரனையுடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு அனுருத்தனன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் தைப்பொங்கல் நிகழ்வு மிகச் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வு விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தைப்பொங்கல் மூலம் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இந்து மரபுகளை கௌரவிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்வின் மூலம் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் புதிய திசை கோடுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version