அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை பகிர்ந்து கொள்ளும் நோக்கில், திருகோணமலை மாநகர சபை இன்றைய தினம் (06.12.2025) மூதூர் மற்றும் வெருகல் பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கியது.
உலர் உணவுப் பொதிகள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் மருந்துகள், மேலும் அனைத்து வயது மக்களுக்கும் தேவையான உடுப்பு வகைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டன.
கௌரவ முதல்வர் க. செல்வராஜா (சுப்ரா) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த மனிதநேயச் செயலில், மாநகர மக்களின் மனமுவந்த பங்களிப்பு சிறப்பாக காணப்பட்டது.
மேலும், கௌரவ முதல்வர், கௌரவ பிரதிமேயர், கௌரவ உறுப்பினர்கள், ஆணையாளர், செயலாளர், கணக்காளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகல் உழைத்து, நிவாரண உதவிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கைகளுக்கு கொண்டு சென்றமை சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
