வேலணை விடிவெள்ளி அமைப்பின் அனர்த்த இடர்கால உதவிவழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, தீவகம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 30 கிராம சேவை அலுவலக பிரிவுகளில் பாதிக்கப்பட்ட 611 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்த உதவி, வேலணை பிரதேச செயலகர் திரு அகிலன் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, நேற்றைய (05.12.2025) மற்றும் இன்றைய (06.12.2025) தினங்களிலும் அவ்வகுதி கிராம சேவை அலுவலகர்களின் மூலம் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
மேலும், வேலணை பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகர்கள் மற்றும் வேலணை விடிவெள்ளி அமைப்பின் செயற்பாட்டுக் குழுவினரும் இணைந்து நேரடியாக சென்று உதவிகளை வழங்கியுள்ளனர்.
இந்த உதவிக்கு நிதியனுசரணை வழங்கியவர், இலண்டனில் வசித்துவரும் திரு விமலரூபன் குணரத்தினம், அவர்களின் நிதிப் பங்களிப்பில் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
