Friday, April 18

இன்றைய தினம், வியாழக்கிழமை (16), யாழ்ப்பாணம் நகரில் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்களிடையே மக்கள்மயப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டத்துடன் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளின் போது, துண்டுப்பிரசுரங்கள் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல் போன்றவை, வேலையில்லாப் பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின் ஆரம்பம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி முன்றலில் நடைபெற்றது.

அதன்பின், யாழ்ப்பாணம் நகரின் பல பகுதிகளில் பேரணி, துண்டுப்பிரசுரம் வழங்கல் மற்றும் தொடர்ந்து விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version