பிரிட்டன் பாராளுமன்ற அவைக்குள் பொங்கல் விழாவை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது என, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிரணி தலைவர் ப.ஜ.க.வின் உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் M L A தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் சமுதாயத்தினருடன் இணைந்து இந்த விழாவை கொண்டாடுவது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
15/01/2025 பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் தமிழ் சமூகமும் இணைந்து பாராளுமன்றத்தினுள் நடாத்திய பொங்கல் நிகழ்வில் கலந்து சிறப்பித்த திருமதி வானதி சீனிவாசன் M L A அவர்கள் இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார்.