Wednesday, July 16

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில், நாட்டின் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

•⁠ ⁠இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 442 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ரூபா 175 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠கல்வி அமைச்சுக்கு ரூபா 271 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கு ரூபா 507 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠விவசாய அமைச்சுக்கு ரூபா 207 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠கடற்தொழில் அமைச்சுக்கு ரூபா 11.4 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சுக்கு ரூபா 5 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠புத்தசான மற்றும் கலாச்சார அமைச்சுக்கு ரூபா 13.7 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠இதில் புத்தசாசன திணைக்களத்திற்கு ரூபா 1970 மில்லியன் ஒதுக்கி உள்ளது.
•⁠ ⁠⁠தொல்லியல் திணைக்களத்திற்கு ரூபா 2520 மில்லியன் ஒதுக்கி உள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதா நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், அதன் விவரங்கள் குறித்து மேலும் தெளிவாகத் தெரியவரும்.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version