Friday, July 18

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பெரும்பாலானவை தரச்சான்றிதழ் இல்லாமல் சந்தைப்படுத்தப்படுவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவலின்படி, இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின் மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

இவற்றில், 15 வர்த்தக நாமங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டுமே தேவையான தரச்சான்றிதழ்களையும் அனுமதிகளையும் பெற்றுள்ளன. இதன் மூலம் சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின் மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏனைய 13 வர்த்தக நாமங்களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு எந்தவிதமான தரச்சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. அதே சமயம், அவற்றின் டின் மீன்கள் அத்துடன் எந்தவிதமான தரநிலைகளும் இல்லாமல் சந்தைப்படுத்தப்படுவதாக தேசிய கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் நுகர்வோருக்கு ஆபத்தாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version