Monday, January 26

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, கடந்த கால ஆட்சிகளில் நடந்தது போல் இந்த ஆட்சியில் சட்டவிரோத மதத் தலங்களுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர், “இந்த அரசு குறுக்குவழியில் வந்த அரசு அல்ல. மக்களின் அபார ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. கடந்த காலங்களில் சட்டவிரோத மதத் தலங்கள் மத வன்முறைக்கு வழிவகுத்து இன வன்முறையாக வெடித்தது. அப்படியான நிலைமை இந்த ஆட்சியில் ஏற்படாது. குழப்பம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதேநேரம் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் இந்து மத கோயில்கள் இருக்கின்ற இடத்தில் புத்த விகாரைகள் இருக்கின்றன என்ற விமர்சனத்தை சுற்றுலா பயணிகள் முன் வைப்பதும், இது சுற்றுலா பயணிகளின் வருகையை பாதிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் கருத்தும் முன்வைக்கின்றனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் பல நூற்றுக்கணக்கான புத்தக விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்றது இதனை எவ்வாறு மக்கள் அகற்ற போகின்றார்கள் என்பது மக்கள் இந்த அரசின் மேல் விமர்சனமாகவே முன்வைத்துள்ளனர்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version