சென்னை துறைமுகத்தில் இருந்து 1.19 கோடி ரூபாய் பெறுமதியான, 950 மெட்ரிக் டன் எடையுடைய நிவாரணப் பொருட்கள் இன்று (06) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட, தமிழக அரசு இந்த நிவாரண உதவியை வழங்கியுள்ளது.
குறித்த பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட பின், புயல் பாதிப்பு அதிகம் பதிவான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இந்நிவாரணம், இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில், சென்னை துணை கமிஷனர் டாக்டர் கணேஷ்நாதன் கீதீஸ்வரன் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வுதவிக்காக தமிழக மக்களுக்கு இலங்கை அதிகாரிகள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
