Monday, March 2

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை, ஈழத்தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் ‘கரிநாள்’ எனப் பிரகடனம் செய்து, தங்களின் எழுச்சிமிக்க விடுதலை உரிமைக்கான குரலாக ஜனநாயக முறையில் போராடி வருகின்றனர். அந்த வகையில் உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவிலும் இன்று வலுவான எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் தேசிய செயற்படலாக்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து,
“இலங்கை சுதந்திர நாள் – ஈழத்தமிழ் மக்களுக்கு கரிநாள்” என்ற கோஷத்துடன், பிரித்தானியாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட வாசஸ்தலத்தின் முன்பாக எழுச்சியுடனான எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்கள்.

பிரித்தானிய நேரப்படி காலை 11 மணியளவில் மக்கள் பெருந்திரளாக அணிதிரண்டனர். பல ஆங்கிலப் பதாதைகள், மனதை உலுக்கும் எழுச்சிவசனங்கள், கோஷங்கள் ஆகியவற்றுடன் அந்தப் பகுதி முழுவதும் உணர்ச்சி கொந்தளிப்புடன் போராட்டக்களமாக மாறியது.

மதியம் 12.30 மணியளவில், இந்த எதிர்ப்புப் போராட்டம் ஊர்வலமாக பிரித்தானிய பாராளுமன்றத்தை நோக்கி நகரத் தொடங்கியது. பல நூற்றுக்கணக்கான மக்கள் இதில் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது, புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தும் ஒரு இனத்தின் விடுதலைக்கான அறைகூவல் வலிமையாக ஒலிக்கின்றதை உலகிற்கு எடுத்துக்காட்டினர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஈழத்தமிழ் மக்கள் ஊர்வலமாக பிரித்தானிய மையப்பகுதியை நோக்கி நகர்ந்தபோது, அங்குள்ள கொள்கைவகுப்பு மையங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான குரல், தாயக எல்லைகளைத் தாண்டி உலகின் மையங்களில் ஒலிக்கின்றதை இந்த கரிநாள் போராட்டம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த கரிநாள் போராட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, எமது தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version