Friday, September 11

புதுக்குடியிருப்பு மக்கள் தொடர்பகத்தில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற உள்ளது.

இச்சந்திப்பு 23.02.2026 திங்கட்கிழமை பிற்பகல் 02.00 மணி முதல் 05.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டு, அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது குறைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version