மட்டக்களப்பில் கலைத்துறையில் புதிய அலைவரிசையை உருவாக்கியுள்ள ‘கூத்தாடி’ திரைப்படத்தின் விசேட காட்சி கடந்த பெப்ரவரி 01 அன்று செல்லம் திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விசேட அழைப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர். திரையிடலின் முடிவில் படத்தின் கதைக்களம் மற்றும் கலைத் தரம் குறித்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
திரையரங்கு வாசலில், படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ரசிகர்களைச் சந்தித்த தருணம் பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும், படக்குழுவினரின் விசேட கௌரவிப்பு மற்றும் மங்கல விளக்கேற்றல் நிகழ்வும், முன்கூட்டியே வந்த கலை ஆர்வலர்களின் உற்சாக வரவேற்பும் புகைப்படத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்: “விசேட காட்சிக்கு கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைக்கிறது. பொதுக் காட்சிகளுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!”
தற்போது, விசேட காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ள நிலையில், பொதுக் காட்சிகள் விரைவில் இலங்கையின் பல பிரதான திரையரங்குகளில் தொடங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
