Monday, March 2

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் 10.02.2026 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் அருள்பயசுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று 22/02/2026 நடைபெற்றது.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் அருள்பயசு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான பொலிஸாரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோரி மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பலர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version