யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ‘நந்தவனம்’ மர வளர்ப்புத் திட்டத்தின் ஐந்தாம் கட்டமாக, நேற்று (24) வவுனியா கணேசபுரம் விவேகானந்த முன்பள்ளியில் சிறப்பான மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மட்டுமின்றி, பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கேகாலைக் கல்வியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டு, இயற்கை பாதுகாப்புப் பணியில் தங்களது பங்களிப்பைச் செய்தனர்.
மரக்கன்றுகள் நட்டு பசுமை நிறைந்த சூழலை உருவாக்கி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சியாக இருந்தது. இளம் தலைமுறையினருக்கு இயற்கை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களிடம் சுற்றுச்சூழல் மீதான அக்கறையை வளர்ப்பதாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு சமூகத்தினர் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்துத்தும் நிகழ்வாகவும் இது இருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இந்த முயற்சி, இயற்கை பாதுகாப்புக்கான ஒரு முன்னோடியாக அமைந்துள்ளது.