மனைவி இறக்கும்போது,அவருக்கு வயது 45 இருக்கும்.
உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை.
அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பதுஎனக்கு போதும். அவனுக்காக வாழ போகிறேன்
இன்னொரு துணை
எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.
வருடங்கள் உருண்டோடியது.
மகன் வளர்ந்து_
பெரியவனானதும்,
தன் வீட்டையும்,
வியாபாரத்தையும்
மகனிடம் எழுதி கொடுத்து விட்டு ஓய்வு பெற்றார்.
மகனுக்கு திருமணமும் செய்து வைத்து,
அவர்களுடனேயே தங்கியும் விட்டார்.
ஒரு வருடம் போனது.
ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம்
சீக்கிரமாக காலை உணவு உண்ண,
மருமகளிடம் ரொட்டியில் தடவ வெண்ணெய் தருமாறு கேட்டார்.
மருமகளோ வெண்ணைய் தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்.
மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார,தகப்பன் வெறும் ரொட்டி துண்டை உண்டு விட்டு நகர்ந்தார்.
மகன் உணவருந்தும் போது, மேஜையில் வெண்ணை கொண்டு வந்து வைத்தாள் மனைவி.
ஒன்றும் பேசாமல் , மகன் தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான்.
அந்த வெண்ணையை பற்றிய சிந்தனையே அந்நாள் முழுதும் அவன் எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருந்தது.
மறுநாள் காலையில் தன் தகப்பனை அழைத்தான்.
அப்பா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான்.
ஏன் எதற்காக என்று தகப்பன் கேட்க…
நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம்.
என் பெயரில் எழுதிய அனைத்தையும்,உங்கள் பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்.
இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன், என்றான்…
ஏன் இந்த திடீர் முடிவு?.
இல்லை அப்பா உங்கள் மதிப்பு என்னவென்று என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
சாதாரண வெண்ணைக்காக நீங்கள் கையேந்தும் நிலை வரக்கூடாது.
ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவள் உணர வேண்டும். மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்…
நன்றி:- நியூ மன்னார்
Trending
- பயங்கரவாத சட்ட வரைபு தொடர்பில் யாழில் திறந்த கலந்துரையாடல்
- செம்மணி சித்துபாத்தி புதைகுழி வழக்கு: வெள்ளநீர் காரணமாக அகழ்வு தாமதம் – அரசின் அணுகுமுறைக்கு எதிராக விமர்சனங்கள் வலுப்பெறுகின்றன
- வடக்கு, கிழக்கில் கடும் குளிர் எச்சரிக்கை – 23ஆம் திகதி வரை இரவு நேரங்களில் 16°C வரை வெப்பநிலை குறையும் அபாயம்
- குளிர் காலநிலை காரணமாக வைரஸ் நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
- உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் பயணம்
- பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா – 2026
- கிழக்கு மாகாண அரச வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு
- ரெலோ மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு
Previous Articleஇலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்
Next Article வீதியோரில் நின்ற இருவரை பேருந்து மோதி ஒருவர் பலி
செய்திகள்
Subscribe to Updates
ஆன்லைன் செய்தியில் நம்பகத் தன்மை, வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்த நமது நாளிதழ் வேலை செய்கிறது!!!
© 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.
